பதின்ம வயது

என் தமிழ் வலைதளத்து-ல சினிமா-வ தவிர வேற எதையும் நான் பெருசா எழுதுறதில்லை. அதுக்கு முக்கிய காரணம் அன்றாடம் நடக்கும் விஷயங்களையும், தகவல்களையும் என்னோட ஆங்கில தளத்துலயே எழுதிவிடுவது தான். இங்கயும் எழுத ஆசை தான். ஆனா என்னோட எழுத்த நானே மொழிபெயர்த்த மாதிரி இருக்கும். (மொழிபெயர்க்குற அளவுக்கு அருமையா எழுதுவியா-னு எல்லாம் கேக்க கூடாது 🙂 )இந்த முறை தமிழ் தளத்துல என்னை பத்தி எழுதறதுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சி இருக்கு. அதுக்கு காரணம் குந்தவை அக்கா. அவங்க தான் இந்த தொடர்பதிவு-ல என்னை கோர்த்துவிட்டு இருக்காங்க. நன்றி அக்கா 🙂

__________________________________________________________________

பதின்ம வயது என்பது ஒரு மனிதனோட வாழ்வில் 13 வயதில் இருந்து 20 வயது வரைக்குமாம். பொதுவா இந்த வயசு-ல பசங்க பண்ற சில விஷயங்கள்:
  1. சைட் அடிப்பது, பெண்களை கவர ஏதேனும் செய்வது.
  2. பள்ளி மற்றும் கல்லூரியில் செய்யும் கலாட்டாக்கள்.
  3. விளையாடுவது.
இந்த பதிவுல நான் பள்ளி பருவத்த வச்சி மட்டும் எழுதுறேன்.
இதுல முதல் விஷயத்த எடுத்தோம்-னா நான் வேறும் சைட் அடிச்சதோட சரி. அதுக்கே நான் பாக்குற பொண்ணு நான் இருக்குற பக்கம் திரும்பிட்டா 360 டிகிரி-ல எந்த டிகிரி-ல முகத்த திருப்பிகிட்டா அவளா நான் பார்த்த மாதிரி தெரியாதோ அங்க வைக்கிறது. இதுல பேசுறது-னா… அட போங்க பாஸூ!!! எதாவது ஒரு பொண்ணு பேசகிட்ட வர்ற மாதிரி தெரிஞ்சாலே சும்மா இருக்குற  ஹார்ட் ரெண்டு மடங்கா துடிக்க ஆரம்பிச்சுடும். பேசிட்டா அவ்வளவு தான். பொண்ணுங்க ரொம்ப தெளிவா தான் பேசுவாங்க. நான் தான் எங்க சொல்ல வந்தது மறந்துடுமோ-னு தத்துபித்து-னு உளறிட்டு இருப்பேன். அதனால ‘கவர’ அப்டிங்கிற வார்த்தை என் அகராதி-ல இல்லாமயே போயிடுச்சு.
அடுத்து.. கலாட்டா. இந்த வார்த்தைக்கும் எனக்குமே கொஞ்சம் தூரம் தான். ஒன்பதாவ்து.. பத்தாவது படிக்கிற வரைக்கும் எனக்கு புஸ்தகம், படிப்பு, வாத்தியார், மதிப்பெண் இத தவிர எதுவும் தெரியாது. முதல் பென்ச் வேற. கடைசி பென்சு-ல நடக்குற தில்லாலங்கடி வேலையெல்லாம் மூணாவது பென்ச்லயே காத்துல கரைஞ்சு என்க்கு விஷயம் தெரியாம போயிடும்.

பதின்றாவது படிக்கும் போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுடுச்சு. வத்தியாருங்கள எல்லாம் மரியாதை இல்லாம பேசுறது, பாதி நோட்டு புத்தகத்த வீட்டுல வச்சிட்டு வர்றத-னு ஆறாங்கிளாஸ்ல பண்ணி இருக்க வேண்டிய அலம்பல்களை எல்லாம் பண்ணிட்டு இருந்தேன்.
இதுல ரெண்டு விஷயம் நடந்துது. பதினோறாவதுல இயற்பியல் பாடத்துல முதல் வகுப்பு தேர்வு நடத்துனாங்க. (இயற்பியல் உண்மையிலேயே ரொம்ப கடி போட்ட ஒரு பாடம். x-ஐயும், y-ஐயும் அதுவரைக்கும் கணிதத்துல மட்டும் பாத்துட்டு திடீர்-னு இதுலயும் பாத்த மயக்கம் வராத குறை தான். ஆ-வூ-னா x,y-ஆ கூப்பிட்டுறுவானுங்க.) அதுல கிட்டதிட்ட எல்லாருமே பெயில் தான். நான் கடைசியிலிருந்து ரெண்டாவது மார்க் (8/40). ஆனா பேப்பர என்னோட மார்க் சொல்லி கொடுத்த போது ஏதோ ‘குரு-சிஷ்யன்’ படத்துல நம்ம சூப்பர் ஸ்டார் – ’ஆச்சி’ மனோரமா காமெடிய பாத்த மாதிரி கெக்க-பெக்க சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். வாத்தியார் ரொம்ப கடுப்பாகி மற்றவர்களுக்கு பாடம் புகட்டும்விதமா என்னை வெளிய அணுப்பிட்டார்.
அன்னையிலிருந்து எனக்கும் அவருக்கும் பிரச்சனை தான். தினமும் வகுப்பு ஆரம்பத்துல கேள்வி கேப்பாரு. சில நாள் பதில் தெரியாம வெளிய போயிடுவேன். சில நாள் சொல்லிட்டு, மத்தவங்கள கேள்வி கேக்கும் போது ஜன்னல் வழியா டெலஸ்கோப் இல்லாம வானியல் ஆராய்ச்சி பன்ணிட்டு இருப்பேன். அப்படியே வெளிய போய் தெளிவா ஆராய்ச்சி பண்ணுப்பா-னு அணுப்பிவிட்டுவார். நானும் சளைக்காம பல நாள் இப்படி வெளிநடப்பு செஞ்சிட்டு இருந்தேன். ஒரு சமயம் ஒரு தேர்வுல நான் எடுக்க போற பாதி மார்க் தாள என் நண்பனுக்கு காமிச்சுட்டு இருந்தேன்.(பாதி பாதி கேர்ந்து ஃபுல் ஆயிடும்-ல). இத வெளிய சுத்திட்டு இருந்த வாத்தியார் பாத்து நம்ம இயற்பியல் வாத்தியார் கிட்ட நடந்தத சொன்னாரு. அவரு என்கிட்ட வந்து, ‘எனக்கு தெரியும்டா நீ தான் பாத்து எழுதி இருப்பேனு’ அப்டினு சொல்லிகிட்டு வெளிய உட்கார்ந்துட்டு இருந்த என்னை உள்ள உட்கார வைச்சாரு. நான் ‘தம்பி!!! உனக்கு யாருப்பா வாத்தியார் வேல கொடுத்தாங்க-னு’ நினைச்சிகிட்டே போய் தெரிஞ்ச கதைய விட்ட எடத்துல இருந்து கிறுக்க ஆரம்பிச்சுட்டேன்.

அடுத்து விலங்கியல் ஆய்வகத்துல நடந்த ஒரு விஷயம். அங்க போன போது ஆளுக்கு ஒரு டெஸ்ட் ட்யூப் கொடுத்து சூடு காட்டுங்க, அப்படி பண்ணா தான் ஆராய்ச்சி-னு சொல்லிட்டாங்க. நான் ஆர்வ கோளாறு-ல ஓவரா சூடு காட்டி ட்யூப் காலி. அதுக்கு ஃபைன் கட்டணும்-னு அப்புறம் சொன்னாங்க. முன்னாடியே சொல்லியிருந்தா டெஸ்ட் ட்யூப ஓரமா வச்சிருந்து இருப்பேன். இப்ப வீட்டுல போய் கேட்டா ‘நீ படிக்கிறதுக்கு மட்டும் இல்லாம உடைக்கிறதுக்கு வேற தரணுமா??? ஆமா இதயே நீ ஒழுங்கா செய்ய மாட்டிங்குறியே… நீயெல்லாம் எப்படி படிச்சு வேலைக்கு போக போற-னு’ சம்பந்தம் இல்லாத ஒரு கேள்விக்கு பதில் சொல்லணும். இதுக்கு எப்படியாவது பழிவாங்கணும் சொல்லி பாத்துட்டு இருந்தேன். அப்படி ட்யூப் காலியாதுல இருந்து வந்த காசு-ல எங்க விலங்கியல் டீச்சர் ஆய்வகத்துல இருந்த ஃபிஷ் டேங்க்-க்கு ஃபிஷ் வாங்க சொல்லி என் நண்பன் கிட்ட காசு கொடுத்துட்டாங்க. அவன் என்னைய கூட கூப்பிட்டுகிட்டான். வகுப்பு நேரத்துல ஊர சுத்துறதுனா யாரு வேணானு சொல்ல போறா. நானும் கிளம்பிட்டேன். ‘எல்லாம் அந்த மீன் தொட்டியால தான் -னு’ ரெண்டு பேரும் கருவிக்கிட்டே போனோம். திடீர்-னு ஒரு ஐடியா – ‘அந்த மீன் தொட்டியே இல்லாம போச்சுனா!!!’. அத செயல்படுத்த கொடுத்த காசுக்கெல்லாம் சேத்து ஒரே ஒரு ‘ஃபைட்டர்’ மீன் வாங்கிட்டு போனோம். ஆனா தொட்டியில இருந்த மத்த மீன்களோட அதிர்ஷ்டம்… டீச்சர் ஃபைட்டர தொட்டியில விடுறதுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சிட்டாங்க 😦
இன்னும் பல விஷயங்கள் இருக்கு. ஆனா எழுதுற எனக்கே கொட்டாவி வருதுனா, படிக்குற உங்களுக்கு கண்டிப்பா வரும். அதனால மத்த விஷயங்களை வேற பதிவுல பாப்போம் 🙂
This entry was posted in என்ன பத்தி சொல்றேன், தொடர்பதிவு. Bookmark the permalink.

6 Responses to பதின்ம வயது

  1. குந்தவை சொல்கிறார்:

    // அதுக்கு ஃபைன் கட்டணும்-னு அப்புறம் சொன்னாங்க. முன்னாடியே சொல்லியிருந்தா டெஸ்ட் ட்யூப ஓரமா வச்சிருந்து இருப்பேன்.

    🙂

    //இன்னும் பல விஷயங்கள் இருக்கு. ஆனா எழுதுற எனக்கே கொட்டாவி வருதுனா, படிக்குற உங்களுக்கு கண்டிப்பா வரும்.

    பாருங்கய்யா அடுத்தவங்க எடுக்கிற படத்த பத்தி பக்கம் பக்கமா எழுதவேண்டியது…. சொந்த படத்த பத்தி எழுத கொட்டாவி வருதாம்.

  2. அன்பு சொல்கிறார்:

    // சில நாள் பதில் தெரியாம வெளிய போயிடுவேன் //
    ok.. தெரிஞ்ச‌ விஷயம்தான்

    //சில நாள் சொல்லிட்டு..//
    ஸ்கூல்ல கேள்விக்கு பதிலெல்லாம் சொல்லுவியா.. இனிமேல் நீ எங்க‌ கூட்டாளி இல்ல. இந்த மாதிரி பசங்களையெல்லாம் சேத்திக்கக் கூடாதுன்னு தீர்மானம் நிறைவேத்தியிருக்கோம்.. 🙂

  3. எஸ். கே சொல்கிறார்:

    அழகான அனுபவங்கள்!

  4. HaRy சொல்கிறார்:

    nama oorla irukira ela pasangalum intha vaysla itha matum than seivanga…. antha pusthakatha parthalee…bayam!! sami machi… nala velai

  5. Porkodi சொல்கிறார்:

    en kooda yen kaai vitutinga kanagu? 😦

பின்னூட்டமொன்றை இடுக