சிங்கம் – விமர்சனம்

கடத்தல், கட்ட பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களை செய்பவர்களை கம்பீரமாக வேட்டையாடி வீழ்த்துபவனே ‘சிங்கம்’.

தூத்துக்குடி நல்லூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ ஆக துரைசிங்கம். அதுவே அவரது சொந்த ஊரும் கூட. அனைத்து விஷயங்களையுமே தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறார். சென்னையில் கட்ட பஞ்சாயத்து செய்பவராக பிரகாஷ்ராஜ். இவரும் சிம்மசொப்பனமாக திகழ்கிறார். இவரும் துரைசிங்கமும் ஏன், எப்படி சந்தித்து கொள்கிறார்கள் மற்றும் அதன் பின் இருவருக்கும் நடக்கும் சண்டையும் தான் கதை.

சூர்யா… மறுபடியும் காக்க காக்க படத்திற்கு பிறகு போலீஸ் வேடத்தில்… கம்பீரமாக இருக்கிறார். போலீஸ் கதாப்பாத்திரம் இவருக்கு நன்றாகவே சூட் ஆகிறது. ஆங்காங்கே வரும் காதல் காட்சிகளில் அட்டகாசமாக செய்திருக்கும் இவர், பஞ்ச் வசனம் பேசும் போது தான் கத்தி காதை கிழிக்கிறார். ஆனால் அதுவும் சில இடங்களில் நன்றாக்வே இருக்கிறது. குறிப்பாக பிரகாஷ்ராஜின் இடத்திற்கு சென்று ‘தனியா வந்து நிப்பேன் -னு நினைக்கிலல, தட்டி தூக்குவேன் -னு…..’ வசனம் பேசும் போது மாஸ். அனுஷ்கா காதலை சொன்னவுடன் கண்ணாடி பார்த்து சிரிக்கும் போது வரும் புன்னகை அப்படியே ‘மெளனம் பேசியதே’ சூர்யாவை நினைவுப்படுத்துகிறது.மாஸ் ஹீரோவாக இந்த படத்தின் மூலம் நன்றாகவே ஊன்றிவிட்டார்.

அனுஷ்கா… இவருக்கும் கொஞ்சம் ஸ்கோப் கொடுத்து இருக்கிறார்கள். நன்றாகவே செய்து இருக்கிறார்… வசன காட்சிகளின் போது காமெடியிலும், பாடல் காட்சிகளில் கவர்ச்சியிலும்.

வில்லனாக பிரகாஷ்ராஜ். கலக்கி எடுக்கிறார். பேச வேண்டிய இடங்களில் பேசி டெரர் காண்பிக்கிறார். படம் தொய்வில்லாமல் செல்வதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.

விவேக்…. படிக்காதவனுக்கு அப்புறம் இப்ப தான் கொஞ்சமேனும் சிரிக்க வைத்து இருக்கிறார். அனுஷ்காவிடம் காசு வாங்கி கொண்டு போன் நம்பர் தரும் இடத்திலும், கடத்தல் லாரியை பிடிக்க வரும் இடத்திலும் இவர் காமெடியை ரசிக்க முடிகிறது. இவரது இந்த இரட்டை அர்த்த வசனங்களை நிறுத்தி கொண்டால் நல்லது என தோன்றுகிறது.

ராதா ரவி, நாசர், ‘நிழல்கள்’ ரவி, விஜயக்குமார்-னு ஒரு பெரிய ஜாம்பவான்கள் கூட்டமே நடிச்சு இருந்தாலும் யாருக்கும் பெரிய ஸ்கோப் இல்ல. ஆனா பண்ண வேண்டிய கேரக்டர்கள நல்லா பண்ணியிருக்காங்க.

ஒளிப்பதிவு – ப்ரியன். ஆக்‌ஷன் காட்சிகள நல்லா படம் புடிச்சு இருக்கார். பாடல் காட்சிகள் எல்லாம் கலர்ஃபுல்.

எடிட்டிங் – வி.டி.விஜயன். அபாரமாக செய்திருக்கிறார். படத்தை தட தட-வென ஒட வைக்கிறார்.

இசை – தேவி ஸ்ரீ பிரசாத். பாடல்கள் சுமாராக இருந்தாலும் எழுந்து ஒடிவிடும்படி இல்லை. ‘என் இதயம்’ எங்கோ கேட்டது போல் இருக்கிறது. ‘Stole my heart’ பாடல் நமது இதயங்களை கொள்ளையடிக்கிறது. பின்னனி இசை பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை.ஒகே.

டைரக்‌ஷன் – ஹரி. சூர்யா எஸ்.ஐ பதவியிலிருந்து, ஏ.சி யாக சில காட்சிகளில் முன்னேறுகிறார். அதே வேகத்தில் படம். முதல் பாதி போவதே தெரியவில்லை. ஜிவ்வென்று சென்று இண்டெர்வெல் கார்டு போடும் போது தான் 1.15 மணிநேரம் போனது தெரிகிறது. இரண்டாவது பாதியில் மசாலா படங்களுக்கே உரிய பிரச்சனையான நீண்ட மற்றும் வசனங்களால் ஆன கிளைமாக்ஸ் படத்தின் வேகத்தை பாதிக்கிறது. தூத்துக்குடியில் பிரகாஷ்ராஜ் பிரச்சனை பண்ணும் போது ஊரே திரண்டு வந்து சூர்யாயுக்கு சப்போர்ட் செய்வது, எக்ஸ்பயர் ஆனா பாஸ்போர்ட்டை வைத்து ஒரு நல்ல காமெடி, காதல் காட்சிகள், வேலையை விட்டு சூர்யா செல்லலாம் என நினைக்கும் போது அனுஷ்காவின் வசனம் என பல காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

படத்தின் சில குறைகள்…. ஹீரோ அதிபுத்திசாலியாக இருப்பது,  வில்லன்கள் கொடுத்த காசை விட அதிகமாக பறப்பது, 20-30 பேர் வில்லனுக்கு பின் வருவது, 10-15 சூமோக்கள் வில்லனின் காருக்கு முன்பும், பின்பும் என மசாலா படங்களின் ஸ்டீரியோ டைப் காட்சிகள் அப்படியே ஃபாலோ பண்ணி இருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம். சூர்யா வில்லன்களை எகிறி அடிக்கும் போது சிங்க முகத்தை கிராபிக்ஸ் பண்ண ஐடியா கொடுத்தவர் ஒழிக.

சில திருப்பங்களை எளிதாக கணிக்க முடிந்தாலும், லாஜிக் உதைத்தாலும் பார்க்கும் போது பெரிய குறை ஏதும் தெரியவில்லை. தன்னை மீண்டும் அற்புதமான ஒரு கமர்ஷியல் டைரக்டராக ஹரி நிருபித்துவிட்டார்.

சூர்யாவின் இந்த 25-வது படம் அவரது சில இரசிகர்களை திருப்திபடுத்தாவிட்டாலும், அவருக்கு மேலும் சில ரசிகர்களை உருவாக்கும்.

சிங்கம் – வெற்றி கர்ஜனை.

பி.கு: சன் டி.வி ட்ரைலரை பார்த்து யாரும் பயந்து விட வேண்டாம் 😉 படம் நன்றாகவே இருக்கிறது 🙂

Advertisements
This entry was posted in சினிமா. Bookmark the permalink.

11 Responses to சிங்கம் – விமர்சனம்

 1. ABC சொல்கிறார்:

  So far Hari has never given a good movie.

  People say that his movie Sami also mostly directed by his assistants.

  But Hari has got a big background and otherwise he is nothing

  கனகு: அத பத்தி எனக்கு தெரியலங்க…. ஆனா ஒரு நல்ல கமர்ஷியல் படம் கொடுத்திருக்கார்..

 2. balamurugan சொல்கிறார்:

  superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  கனகு: 🙂 🙂

 3. kunthavai சொல்கிறார்:

  நான் சிங்கத்தை பார்க்காமலே பயந்து போயிருந்தேன். பயப்படதேவையில்லைன்னு எழுதியிருக்கீங்க. விமர்சனத்தை பார்த்தால் பார்க்கவேண்டும் போல் கொஞ்சம் ஆசையும் என்னை அறியாமல் வந்து விட்டது 🙂 .உங்களை நம்ம்ம்ம்பி பார்க்கபோறேன்.

  ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் தம்பிக்கு அப்புறம் இருக்கு……….

  கனகு: கண்டிப்பா பாருங்க அக்கா… பிடிக்கும்னு நினைக்கிறேன்…. 🙂 கடவுள் தான் என்னை காப்பத்தணும் 🙂 🙂

 4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  படம் எப்படி இருக்குன்னு இணையத்துளையே பார்த்துட்டுப் போங்க,.

  http://www.isaithenral.com/video/?cat=34

  – ஜெகதீஸ்வரன்.

  கனகு: கண்டிப்பா 🙂 🙂

  http://sagotharan.wordpress.com/

 5. வித்யாசாகர் சொல்கிறார்:

  காவலாளிகள் லஞ்சம் வாங்காமல் பார்கவேண்டிய படம், ஒரு காவலாளி எத்தகைய தைரியத்திற்கும், பொறுப்பிற்கும், பலத்திற்குமுரியவரென்பதை மிக அழகாக தன் நடிப்பினால் காட்டியிருக்கிறார் சூர்யா. மசாலா தான் எனினும், பார்க்கக் கூடிய மசாலா. மிக நல்ல படம். பலர்; எதன் பொருட்டோ தவறான விமர்சனங்களையே பதித்து வருகையில், அவர்களை தாண்டி சரியான விமர்சனம் பதிந்த கனகுவிற்கு நன்றிகள் பல..

  வாழ்த்துக்களுடன்..

  வித்யாசாகர்

  கனகு: மிக்க நன்றி வித்யாசாகர்… 🙂 🙂 படத்தை பார்த்த போது பிடித்திருந்தது… மற்றவர்கள் சூர்யாவிடமிருந்து இம்மாதிரி மசாலா படத்தை எதிர்பார்க்கவில்லை போலும்…

 6. சேரல் சொல்கிறார்:

  //சூர்யா வில்லன்களை எகிறி அடிக்கும் போது சிங்க முகத்தை கிராபிக்ஸ் பண்ண ஐடியா கொடுத்தவர் ஒழிக.//

  🙂 🙂

  கனகு: 🙂 🙂

 7. mariappan சொல்கிறார்:

  padam super

  கனகு: 🙂 🙂

 8. யோகனாதன்.நா சொல்கிறார்:

  படத்தைப் பற்றி நன்றாக எழுத வேண்டும் என நினைத்து எழிதியது போல உள்ளது உங்கள் விமர்சனம். 😛

  கனகு: ஹி ஹி ஹி…. அப்படி எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை நண்பா 🙂 🙂

 9. தாரணி சொல்கிறார்:

  சுறு சுறுன்னு ஒடுது படம். எனக்கும் பிடிச்சுதான் இருக்கு

  கனகு: நன்றி அக்கா 🙂 🙂

 10. Karthik Narayan சொல்கிறார்:

  //சன் டி.வி ட்ரைலரை பார்த்து யாரும் பயந்து விட வேண்டாம் 😉 படம் நன்றாகவே இருக்கிறது 🙂

  ஹாஹா முடியல தல. பார்க்கிறேன். 🙂

  கனகு: பாருங்க 🙂 🙂

 11. HaRy சொல்கிறார்:

  masala than mache… ana as yu said! 🙂

  கனகு: ஆமா மச்சி 🙂

  but i still think commercial movies elam vitutu hindi mathiri little reality or some story shud be there!

  கனகு: இங்கயும் அந்த மாதிரி கதைகள் அப்பப்போ வருது மச்சி.. அங்கயும் அப்பப்போ தான் வருது… ஆனா ஹிந்தியில நமக்கு நல்ல படங்கள் மட்டும் தெரியுறதுனால நாம அப்படி சொல்றோம் 🙂 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s