வ – குவார்ட்டர் கட்டிங்

ஹாலிவுட் படங்கள் ‘ஸ்பீட்’, ‘டை ஹார்ட்’ போன்ற படங்கள பாக்கும் போது நமக்கும் தமிழ் சினிமா-ல இந்த மாதிரி ஒரே இரவு இல்ல பகல்ல நடக்குற மாதிரி ஒரு படம் வராதா-னு தோணும். அப்படிபட்ட ஒரு படம் தான் இது. என்ன இது காமெடி வகையறா. ஓர் இரவில் ஒரு குவார்ட்டராவது அடித்துவிட்டு தான் சவுதிக்கு ப்ளைட் ஏற வேண்டும் என்ற கொள்கை கொண்ட ஹீரோவின் காவியமே ‘வ’ குவார்ட்டர் கட்டிங்.

கதை-னு இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவுமில்ல. ஆனா இத வச்சே ஒரு 135 நிமிடங்கள் நம்மை தியேட்டரில் உட்கார வைக்க பாடுபட்டிருக்கிறார்கள் இப்படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி. கதைக்களம்-னு பாத்தா நம்ம தமிழ் சினிமாவுக்கு இது புதுசு. ஒரு இரவு தான் கதை. அதுல முடிஞ்ச வரைக்கும் பொழுதுபோக்குக்காக சில கேரக்டர்கள சேர்த்து கொடுத்து இருக்காங்க. ஆனா அங்க தான் பிரச்சனையே. பல கேரக்டர்கள் இருந்தாலும் சிலவையே நம்மை இரசிக்க வைக்கின்றன.

ஹீரோ மிர்ச்சி ‘சிவா’. கலக்கி இருக்காரு. எஸ்.பி.பி.சரண் கிட்ட அவர் கட்டிங் எப்படி சாப்டுறோம்-னு சொல்ற இடம் செம காமெடி. அவருக்கு மச்சினனாக எஸ்.பி.பி.சரண். பல இடங்கள்-ல இவங்களோட ஒன் – லைனர்கள் ரசிக்க வைக்குது. லேகா வாஷிங்கடன் மக்கு மாணவியா வர்றங்க. +2 மாணவி-னு இவங்கள பாத்தா நம்ப முடியுது!!!

ஜான் விஜய். படத்தோட வில்லன். இரட்டை வேடம். இரண்டுக்கும் நல்ல வித்தியாசம் காட்டி அவர் செய்திருந்தாலும் எனக்கு பிடிக்கவில்லை. இந்த மாதிரி படங்களை நான் பார்ப்பது புதிது என்பதால் இருக்கலாம். மற்ற அனைவரும் முடிந்தவரை சீரியஸாக இருந்து நம்மை சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

டெக்னிக்கலா படம் டாப். நீரவ் ஷா த்ன்னுடைய வழக்கமான் அசத்தலான ஒளிப்பதிவ கொடுத்து இருக்கார். படத்தோட மூட செட் பண்ணதுல அவரோட பங்கு அதிகம். அதே மாதிரி படம் லைட்டிங்கும் அட்டகாசம். எடிட்ங் – ஆண்டனி. சில காட்சி கத்தரிப்புகள் எல்லாம் அனயாசம். ஆனாலும் முதல் பாதியை இவரால் துரிதபடுத்த முடியவில்லை.

இசை – ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல்கள்-ல சவுதி சேக் பாடல் ஒ.கே. இரண்டவது பாதி-ல மெலடி ஒண்ணு வந்துது. அது நல்லா இருக்கு-னு என் நண்பர்கள் சொன்னாங்க. ஆனா எனக்கு பிடிக்கல. பின்னனி இசை பல இடங்கள்-ல நல்லா இருந்துது. சில இடங்கள்-ல தலைவலி.

முதல் பாதி ஆரம்ப 30 நிமிடங்கத்திற்கு பிறகு இழுவையாய் செல்ல, இரண்டாம் பாதி கொஞ்சம் வேகமாகவே செல்கிறது. திரைக்கதையில் மேலும் சில சுவாரஸ்யங்களை சேர்த்து இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படம் கோர்வையாக இல்லாமல் சில, சில காட்சிகளாய் மட்டுமே நன்றாக உள்ளது. ஆனாலும் புஷ்கர்-காயத்ரி அவர்களின் இந்த முயற்சி வரவேற்கதக்கதே.

‘வ’ குவார்ட்டர் கட்டிங் – சில கட்டிங்-ல மப்பு ஏறல.

Advertisements
This entry was posted in சினிமா. Bookmark the permalink.

4 Responses to வ – குவார்ட்டர் கட்டிங்

 1. குந்தவை சொல்கிறார்:

  இந்த படம் வந்திருச்சா? எப்படிய்யா இப்படி படம் பாக்குறீங்க?

 2. அன்பு சொல்கிறார்:

  படம் மொக்கைன்னு பல பேரு சொல்லறாங்க.. ஓவர் பில்ட்-‍‍அப் கொடுத்தா இதுதான் பிரச்சினை..

  • kanagu சொல்கிறார்:

   படம் ஒ.கே. மொக்கை அப்டி-னு சொல்ல முடியாது. அவங்க வேற மாதிரி காமெடிய எதிர்பார்த்து போயிருப்பாங்க-னு நினைக்கிறேன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s