சுறா – ஒரு யதார்த்த ’தமிழ்’ சினிமா????

தமிழ் சினிமாவிற்கென சில மரபுகள் உண்டு. அதை எந்த விதத்திலும் உடைக்காமல் எடுக்கப்பட்டுள்ள திரைக்காவியமே ‘சுறா’. எப்படி??

ஊரே போற்றும், அவர்களுக்காகவே போராடும், பக்கம் பக்கமாக வசனம்(அறிவுரை, சவால், பஞ்ச் டயலாக் என படிக்கவும்) பேசி கொண்டும், இவர் பேசாமல் விட்டதையும் மற்றவர்களை சொல்ல வைத்து, எத்தனை அடி வாங்கினாலும் எழுந்து நின்று, எததனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யும் ஹீரோவாக விஜய்.

லூசா, அரைலூசா என்று பட்டிமன்றமே நடத்தும் அளவிற்கு ஒரு  கேரக்டராக, துணியை விற்று தன்னுடைய கார் வாங்கிய தாராள மனசுடையவராக, ஹீரோவை பார்த்தவுடன் காதல் கொள்பவராக, பாடலில் குத்தாட்டம் போடுபவராக ஹீரோயின் தமன்னா.

நாயகியின் லூசு பட்டத்திற்கு போட்டியாகவும்,  ஹீரோவிடம் மட்டுமல்லாமல் மற்ற அனைவரிடமும் அடிவாங்க காமெடியன் வடிவேலு. இவரின் இந்த பட காமெடி பார்த்து ‘இதுக்கு மேல வேணாம், அழுதுருவேன்’ என்று இரசிகர்கள் அவரது டயலாக்கையே அடிக்கிறார்கள்.

யார் யாரையோ அசால்ட்டாக போட்டு தள்ளி டயலாக் பேசுபவராக, ஆனால் நாயகனிடம் வசனம் மட்டும் பேசி அவனை கொல்லாமல் விடுவதற்கு லாஜிக் சொல்வராக, அமைச்சராக், மிக மோசமானவராக வில்லன்.

ஹீரோவின் புகழ் பாடும் எதிர்கோஷ்டி எடுபிடியாக இளவரசு. மற்ற அனைவரும் பாடுவார்கள். இவர் கொஞ்சம் ஸ்பெஷல்.

டைரக்டரின் ’டச்’கள்:

பாம் இருக்கும் இடத்திலேயே வில்லனின் மனைவியையும், குழந்தைகளையும் வைத்தது,

விஜய் அந்த பார்வையற்றவரிடம் பேனா வாங்கியவுடனே தமன்னாவிற்க்கு காதல் வர வைத்தது,

விஜய் ஊர் திருவிழாவில் ஆடும் போது தமன்னா அவரின் அம்மாவுடன் நிற்க, பாடலுக்கு நடுவே அவர்களை க்ளோசப்பில் காட்டுவது,

ஹீரோவுக்கு பின் சூறாவளியையும், சுனாமியையும் காட்டுவது,

ஹீரோவை அடிக்க வரும் கும்பல் அவரின் அம்மாவின் மண்டையை உடைப்பது…

விஜய் எல்லோராலும் இறந்துவிட்டார் என  நம்பபட்ட பிறகு, சடாரென்று எழுந்து வருவது…

ஜட்ஜ்க்கே மிமிக்ரி செய்து காட்டி சட்டம் சொல்லி கொடுப்பது…. ஆவ்வ்வ்வ்..

….இப்பவே கண்ண கட்டுதே…..

சுறா – எர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றா… (இத வச்சி வேற ஏதோ ஒரு ‘பஞ்ச்’ வந்துது).

Advertisements
This entry was posted in சினிமா. Bookmark the permalink.

8 Responses to சுறா – ஒரு யதார்த்த ’தமிழ்’ சினிமா????

 1. G3 சொல்கிறார்:

  :))))))))))))))))))))

  Eththanai murai adi pattaalum thirumba thirumba poi adi vaangaradhae unakkae pozhappa pochae ;))) adutha vaatiyaavadhu indha maadiri thappellam pannaama iru raasa 😀

  கனகு: சொல்லிட்டீங்களா… கண்டிப்பா செஞ்சிரணும்… ரொம்ப மொகக போடுறான்… 🙂 🙂

 2. Tharani சொல்கிறார்:

  வேர்ட் பிரஸ் நல்லா இருக்கா எனக்கு என்னவோ ப்ளாக் தான் செட்டாகுதுப்பா 🙂

  கனகு: எனக்கு ப்ளாக்கர்-ல சரியா வோர்க் பண்ண தெரியல அக்கா.. அதான் தெரிஞ்ச மாதிரி இங்க மாறிட்டேன்…

  சுறா படம் பாத்தாச்சா. மொக்கை படமா அமையுது உங்களுக்கேன்னு என்ன செய்ய. ஆனா இந்த படத்துல டான்ஸ் சூப்பர்ன்னு தம்பி சொன்னான். (டான்ஸ் மட்டுமே )

  கனகு: அதுவும் சில பாட்டுக்கு தான் அக்கா..

 3. kunthavai சொல்கிறார்:

  //லூசா, அரைலூசா என்று பட்டிமன்றமே நடத்தும் அளவிற்கு ஒரு கேரக்டராக
  //நாயகியின் லூசு பட்டத்திற்கு போட்டியாகவும், ஹீரோவிடம் மட்டுமல்லாமல் மற்ற அனைவரிடமும் அடிவாங்க காமெடியன் வடிவேலு. இவரின் இந்த பட காமெடி பார்த்து ‘இதுக்கு மேல வேணாம், அழுதுருவேன்’ என்று இரசிகர்கள் அவரது டயலாக்கையே அடிக்கிறார்கள்.

  ha…ha….
  எல்லாம் சரி தம்பி.
  அப்படியே இந்த படத்தை போய் பார்க்கற நமக்கும் ஒரு பட்டத்தை கொடுத்துட்டு போங்க

  கனகு: படம் பாத்து மொக்க வாங்கி, உங்கள எல்லாம் காப்பத்துனதும் இல்லாம எனக்கு பட்டம் வேறயா???? ஹூம்ம்ம்.. 🙂 🙂

 4. Porkodi சொல்கிறார்:

  ஆஹா.. புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்! ஆனா இனிமே நான் எப்படி ஃபாலோ பண்றது?! பதிவு சுறா படத்தை பாத்ததுமே கிர்ர்ர்ர்னு ஆகிடுச்சு! 🙂

  கனகு: வாங்க… வாங்க.. நன்னி நன்னி 🙂 🙂
  நீங்க ப்ளாக்கர் ஹோம்பேஜ் வழியா ஃபாலோ பண்ண முடியும்… சைட்பார்-ல அட்ட்-னு ஒரு ஆப்ஷன் இருக்கும் பாருங்க 🙂 🙂
  படம் பாத்தீஙகனா அவ்ளோ தான்… காலி 🙂 🙂

 5. Vigneswari Khanna சொல்கிறார்:

  ஏதோ நீங்கள்லாம் விமர்சனம் எழுதி என்னைப் படம் போக விடாமக் காப்பாத்திட்டீங்க. தேங்க்ஸ்.

  கனகு: வாங்க விக்னேஷ்வரி 🙂 🙂 எஸ்கேப் ஆனதற்கு வாழ்த்துக்கள் 🙂 🙂

 6. தமிழன் சொல்கிறார்:

  பார்வையற்றவரிடம் பேனா வாங்கியவுடனே தமன்னாவிற்க்கு காதல் வர வைத்தது,அடங்கொப்பா உலக மஹா திங்கிங்டா சாமி,இப்பிடி பார்த்தா நம்மையெல்லாம் எத்தன பொண்ணுக லவ்வியிருக்கணும்

  கனகு: கண்டிப்பா… எனக்கு ஒரு சந்தேகம்… நாம பாக்குற பொண்ணுங்களுக்கு தான் அவ்வளவு நல்ல மனசு இல்லையோ????

 7. உண்மைத்தமிழன் சொல்கிறார்:

  கனகு தேவையா இது..? இப்படி இந்தப் படத்தையெல்லாம் பார்த்து உடம்பையும், மனசையும் கெடுத்துக்கணுமா..? யோசிம்மா யோசி..!

  கனகு: இவ்ளோ சொல்லிட்டு ‘குரு சிஷ்யன்’ படத்த பாத்துட்டீங்களே அண்ணா….

 8. mariappan சொல்கிறார்:

  padam dappaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  கனகு: 🙂 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s